Saturday, 2 September 2017

மழைக்காலத்தில் நோய்களால் அவதிப்படுறீங்களா? இதோ உங்களுக்கான உடனடி வைத்தியங்கள்!!

பருவ மழைக்காலம் வரப் போகுது என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பர். தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குழந்தைகள் விளையாடி ஆனந்தம் கொள்வர். பெரியவர்களும் தங்களது நிறைய தேவைகளுக்கு மழையை நம்பி வாழ்கின்றனர்.
இப்படி எல்லாரும் மழைக்காலத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்போம். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த மழைக்காலத்தில் வளங்களோடு வியாதிகளும் நோய்களும் சேர்ந்து வருவது தான்.How To Stay Healthy During Monsoon With Ayurveda
சரிங்க வருகின்ற இந்த நோய்களை சரி பண்ற முறையை தெரிந்து கொண்டால் நிஜமாகவே நாம் எல்லாரும் மழைக்காலத்தில் சந்தோஷத்தில் நனையலாம் அல்லவா.
எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தை சமாளிக்கவே ஆயுர்வேதம் நமக்கு நிறைய மருத்துவ பொருட்களை கூறுகிறது. இந்த ஆயுர்வேத முறையையும் அதன் பயன்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போறோம்.டிப்ஸ் #1

டிப்ஸ் #1

இந்த மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி இந்த காலத்தில் காரமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
காரணம்
காரமான உணவுகள் உங்களது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும அழற்சிகள் மற்றும் பயோடெர்மா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். எனவே நீங்கள் அடுத்த தடவை காரசாரமான பக்ரோஸ் சாப்பிட நினைத்தால் தயவு செய்து அதை கைவிட்டு விடுங்கள்.டிப்ஸ் #2

டிப்ஸ் #2

நீங்கள் இக்காலத்தில் வேப்பிலையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
காரணம்
வேப்பிலையில் உள்ள கசப்புத் தன்மை எந்த வகை கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் பெற்றது. எனவே இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த நோயும் உங்களை அண்டாது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான பாக்டீரியல் மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கிறது. டிப்ஸ் #3

டிப்ஸ் #3

துளசியுடன் சுடு தண்ணீர் கலந்து குடிப்பது இக்காலத்திற்கு அருமையான மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
காரணம்
துளசி தான் மூலிகையின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இறப்பை ஏற்படுத்தும் காய்ச்சலான டெங்கு, மலேரியா போன்றவற்றிலிருந்து காக்கிறது . இந்த இரண்டும் மழைக்காலத்தில் அதிகமாக பரவும் நோயாகும். டிப்ஸ் #4

டிப்ஸ் #4

அடுத்ததாக நாம் பார்க்க போவது மெத்தி என்று அமைக்கப்படும் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயம் எல்லா நேய்களுக்கும் ஒரு தடுப்புப் பொருளாக செயல்படுகிறது.
காரணம்
இது நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் பொருளாகும். இதில் உள்ள நிறைய தாதுக்கள் உங்களை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. நீங்கள் காய்ச்சலில் இருக்கும் போது கூட இதை எடுத்து கொள்ளலாம். மேலும் நிறைய வகையான சீரண பிரச்சினையை சரி பண்ணுகிறது.டிப்ஸ் #5

டிப்ஸ் #5

மஞ்சள் மற்றும் சூடான பால் தொண்டை கட்டு, தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், மார்புச்சளி மற்றும் சளித் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
காரணம்
இதில் குர்குமின் என்ற சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைகளிலிருந்து நம்மை காக்கிறது.டிப்ஸ் #6

டிப்ஸ் #6

பாகற்காய் ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
காரணம்
இதில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது உடலில் ஏற்படும் நோய்களை நம்மை அண்ட விடாமல் துரத்தி விடும். மேலும் இதை சாப்பிட்டால் ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடம்பு கிடைக்கும்.டிப்ஸ் #7

டிப்ஸ் #7

எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள் வாய்க்கு ருசியாக இருக்கும். ஆனால் இந்த மழைக்காலத்தில் உடலுக்கு இது மிகவும் கேடு.
காரணம்
இந்த பொருட்களில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உங்கள் சீரண சக்தியை கஷ்டமாக்கி விடும். இதனால் இந்த எண்ணெய் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது எனவே மழைக்காலத்தில் இதை தவிர்ப்பது தான் சிறந்தது.
என்னங்க இந்த ஆயுர்வேத பொருட்களை கொண்டு மழைக்காலத்தில் நோயிலிருந்து விடுபடுங்கள். மழைக்காலத்தை சந்தோஷமாக அனுபவித்து ரசியுங்க

எப்போதும் சோர்வை உணர்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறை. நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பல்ப், மொபைல் போன், கேட்ஜெட்டுகள் போன்றவை இல்லாததால் சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்து வேலை பார்த்து வந்தனர். அதனாலேயே நன்கு ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.

ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...Here is the reasons why you are always tired உடல் உழைப்பின்றி இருப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதால் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தினமும் 1000 படிகள் ஏறி இறங்குவது, நிறைய தூரம் நடப்பது என்றெல்லாமல் தேவை இல்லை. நிறைய நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் சோர்வினையும், மூட்டு எலும்புகளில் வலியையும், இடுப்பு வலியையும், நாள்ப்பட்ட தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியமான வாழ்நாளை குறைத்துவிடும். இவற்றிற்கு வழி என்னவென்றால், நிறைய நேரம்உட்கார்ந்திருக்கும் தருணத்தில் சிறிது நேரம் எழுந்து நடப்பது, அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 10 நிமிடம் நடக்கலாம், மாடிப்படி ஏறி இறங்கலாம், அருகில் இருப்பவருடன் நடந்து கொண்டே சிறிது பேசலாம். இவை எல்லாம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடும்.
முறையற்ற உணவு பழக்கம்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை முதலில் விடுங்கள். இதுவே உடலுக்கு முறையான தூக்கத்தை தரக்கூடியது. ஒரு வேலை நீங்கள் அனைத்து உணவு வகைகளையும் முறையாகவும் சரியாகவும் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த தருணங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.Here is the reasons why you are always tired தரமற்ற தூக்கம்
பெரும்பாலோர் 7 முதல் 9 மணி நேரங்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். இருப்பினும் அவர்கள் காலையில் எழும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர்கிறார்கள். இதற்குக் காரணம் தூக்க சுழற்சி சரியாக இல்லாதது. ஒரு வழக்கமான தூக்க சுழற்சியை 75 முதல் 90 நிமிடங்கள் வரை REM மற்றும் REM இல்லாத தூக்கம் மற்றும் பிற நிலைகள் இடையே அமையும். இந்த நிலைகளில் ஒவ்வொன்றும் உங்கள் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கு மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுவதற்காகவும் செயல்படக்கூடியது. தரமற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, ஆல்கஹால் குடிப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது போன்றவை.
இவற்றில் இருப்பது தப்பிக்க அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் பட செய்வது, மதிய வேலையில் காஃபின் அளவு சேர்ப்பதை குறைப்பது, எலெக்ட்ரிக் உபகரணங்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.Here is the reasons why you are always tired மன அழுத்தம்
வேலையிலும், தொழிலும், எதிர் காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும போது நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் அவர்களின் தூக்கம் கெட்டு உடல் சற்று சோர்வாகவே காணப்படும். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொழிலை கவனிப்பதால் கிடைக்கும் பலன் மனஅழுத்ததின்ல் உருவான உடல் சோர்வு. இந்த காலத்து ஆண்களும பெண்களும் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது மப அழுத்தத்தை சரி செய்வதற்காக மட்டுமே. இவற்றை போக்கும் வழியாக அமைவது தியானம், யோகா, மசாஜ் மற்றும் இயற்கை காற்றில் நடமாடுவது போன்வறை. மேலும், மொபைல் போனை சற்று தொலைவில் வைத்துவிடுங்கள்.

பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!!

பெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.
எதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்?
அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.
பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.An Amazing home remedy to treat irregular periods என்ன செய்ய வேண்டும்?
காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.அற்புத மருந்து :

அற்புத மருந்து :

உடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.
அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.
பெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.
தேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.
இத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா?கடுக்காயின் ரகசியம் :

கடுக்காயின் ரகசியம் :

கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.நன்மைகள் :

நன்மைகள் :

அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.
கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

கடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,
உடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.
அற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.

உங்கள் ரத்தத்தில் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகள்!!

இரத்தத்தில் இருக்கும் கூறுகளான இரத்த தட்டுக்கள், காயங்களின் போது உங்கள் உடலில் குறையும் இரத்தத்திலிருந்து காப்பாற்ற பெரிதும் உதவுகிறது.
இருப்பினும், எப்படி உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறைகிறது? என்பதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தட்டுக்கள் என்பது இரத்த செல்களாகும். இது நம் உடலில் இரத்த கட்டிகளை உருவாக்க உதவுகிறது. மேலும், இந்த தட்டுக்களிற்கு, செல்களில் உண்டாகும் குறைகளை சரி செய்யும் குணமும் இருக்கிறது.
தட்டுக்களின் எண்ணிக்கையானது, தட்டுகளின் செறிவில் இருக்கும் இரத்தம் கொண்டே கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக, இரத்த எண்ணிக்கை என்பது 150,000 முதல் 400,000 தட்டுக்கள் வரை இரத்த நுண்ணுணர்வை காட்டிலும் இருக்கிறது.Best Foods To Increase The Blood Platelet Countகுறைவான தட்டுக்களின் எண்ணிக்கைகான சில பொது அறிகுறிகளாக, அதிகமான சிராய்ப்பு, மூக்கு அல்லது ஈறுகளில் ஏற்படும் தன்னலமற்ற இரத்தப்போக்கு, வெட்டுகளினால் ஏற்படும் தொடர் இரத்தம் வடிதல், மலத்தில் இரத்தம், தோல் வடுக்கள் ஆகியவை காரணங்களாக இருக்கிறது.
மேலும், பெண்கள்...அதிக மாதவிடாய் ஓட்டத்தின்போதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இத்தகைய சிரமத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு பலவீனம் மற்றும் சோர்வும் உண்டாகிறது.
இவ்வாறு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு நபருக்கு குறைவதற்கோ அல்லது ஏற்றம் அடைவதற்கோ முக்கிய காரணமாக...புற்றுநோய், கடுமையான கல்லீரல் நோய், ரத்தப் புற்று நோய் (லுகேமியா), இரத்த சோகை, தீங்குவிளைவிக்க கூடிய இரசாயணங்களின் வெளிப்பாடு, கர்ப்பமடைதல், கீமோதெரபி மருந்துகள், அதிகம் மது அருந்தும் பழக்கம், வைட்டமின் B12 குறைபாடு என இன்னும் நிறையவே இருக்கிறது.
இந்த ஆர்டிக்கலின் மூலமாக, சில சிறந்த உணவுகளை கொண்டு உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்க செய்வது என்பதை நாங்கள் விவரித்திருக்கிறோம். மேலும் தொடர்ந்து இதனை நீங்கள் படிப்பதன் மூலம், எத்தகைய உணவெல்லாம், உங்கள் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவுகள் என்பதை நாம் பார்க்கலாம்.வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

வைட்டமின் C அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் தட்டுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒன்றாக வைட்டமின் C அடங்கிய உணவுகள் இருக்கிறது. மேலும் இந்த வைட்டமின் Cயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருக்கிறது. அதனால், நம் தினசரி வாழ்க்கையில்...இந்த வைட்டமின் C அடங்கிய உணவுகளை 400 முதல் 2000 மில்லி கிராம் வரை நாம் எடுத்துகொள்ளலாம். ஆம், ஆரஞ்சு, கீரை, பூக்கோசு, பந்து மிளகுத்தூள் என இன்னும் நிறைய பொருட்களில் இந்த வைட்டமின் C இருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:

ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், மீன், மற்றும் கீரையில் இந்த கொழுப்பு அமிலமிருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதோடு, இரத்த தட்டுக்களின் அளவையும் அதிகரிக்க நமக்கு இவை உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் எடுத்துகொள்வதால்...இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டினை இது போக்க பெரிதும் துணை புரிகிறது.ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்பும் அடங்கிய உணவுகள்:

நாம் அதிகளவில் காய்கறிகளையும், முழு தானியங்களையும், அர்கானிக் பீன்ஸ் என பலவற்றை நாம் எடுத்துகொள்வது நல்லது.
ஆண்டிஆக்ஸிடண்ட் பண்பு அடங்கிய உணவுகள், தீங்குவிளைவிக்க கூடிய தன்மை கொண்ட பொருட்களை நடுநிலைப்படுத்த, தட்டுக்களின் எண்ணிக்கை குறைபாட்டை தவிர்க்கவும் பெரிதும் இது உதவுகிறது. ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

ஃபோலேட் நிறைந்த உணவுகள்:

இந்த ஃபோலேட் குறைபாட்டால், இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைகிறது. அதனால், ஃபோலேட் அடங்கிய உணவுகளை நாம் அதிகம் உணவுடன் சேர்த்துகொள்வதன் மூலம், அதில் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள், உங்கள் உடலின் ஆரோக்கியமான செல் பிரிவுகளுக்கு வழிவகை செய்கிறது.
இந்த ஃபோலேட் நிறைந்த உணவுகளான... அஸ்பாரகஸ், தானியங்கள், ஆரஞ்சு மற்றும் கீரைகள்., உங்களுடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவி செய்கிறது. வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

வைட்டமின் A அடங்கிய உணவுகள்:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வைட்டமின் A உதவுகிறது. நம் உடம்பில் புரதம் உருவாவதற்கு இந்த வைட்டமின்கள் நமக்கு தேவைப்படுகிறது. ஆரோக்கியமான புரத கட்டுப்பாட்டின் மூலம் செல்கள் பிரிவும், செல்களின் வளர்ச்சியும் இருக்க...பூசணிக்காய், கேரட், இனிப்பு உருளைகிழங்கு என பலவற்றில் இந்த வைட்டமின் A நிறைந்து காணப்படுகிறதுவைட்டமின் B12:

வைட்டமின் B12:

உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைவதற்கு ஓர் காரணமாக வைட்டமின் B12 குறைபாடு இருக்கிறது. அதனால், நம் உணவு முறையில் வைட்டமின் B12ஐ நாம் சேர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதனால், இயற்கையிலே உங்கள் உடலில் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கிறது. சில சிறந்த உணவுகளான சல்மான் மீன்கள், மாட்டிறைச்சி, சிக்கன், சூரை மீன், வான்கோழி என பலவற்றுள் இந்த வைட்டமின் B12 நிறைந்திருக்க, அது உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் பெரும் துணை புரிகிறது.அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்:

இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும், அமினோ அமிலம் நிறைந்த உணவுகள் இரத்த உற்பத்தி முறைக்கு (haematopoiesis) பெரிதும் உதவுகிறது.
மேலும், இந்த அமிலம் நிறைந்த உணவானது, உடம்பில் புதிய இரத்த செல்களை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

இயற்கை காட்டும் வழியில், உடம்பில் இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் இந்த ஆரஞ்ச் நிற பழத்தை நாம் உண்பதால்...இதில் அதிகளவில் இருக்கும் இரும்பு சத்து, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்ய, ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை நாம் சாப்பிட்டு பயனடையலாம்.
அத்துடன், இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள், நம் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்களை வேகமாக அதிகரிக்கவும் உதவி புரிகிறது.பேரிட்சை

பேரிட்சை

இது ஓர் சிறந்த உணவாக, உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. பேரிட்சையில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள், தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையிலே உயர்த்த பெரும் துணையாய் நிற்கிறது.சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

சிப்பிகள் (ஓய்ஸ்டர்ஸ்):

இதில் இருக்கும் துத்தநாகம், உங்கள் உடலில் இருக்கும் இரத்த செல்களையும், இரத்த தட்டுக்களையும் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், எதிர்ப்பு சக்தியை நமக்கு தரும் இந்த துத்தநாகம், உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த செல்லை வலுப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது. அதனால், இயற்கையிலே இரத்த தட்டுக்களை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவாக, இந்த சிப்பிகள் அடங்கிய உணவுகள் விளங்குகிறது.முழு தானிய உணவுகள்:

முழு தானிய உணவுகள்:

வைட்டமின் மற்றும் கனிம ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த முழு தானிய உணவுகள், இயற்கையிலே நம்முடைய இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் உதவ முன்வருகிறது.வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

வைட்டமின் K அடங்கிய உணவுகள்:

இந்த வைட்டமின் கொண்ட உணவுகளின் மூலம், நம் உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த தட்டுக்கள், பத்து நாள்களுக்கு மட்டுமே நம் உடம்பில் நீடிக்க, உடலில் அழியும் தட்டுக்களின் இடத்தை நிரப்ப, ஆரோக்கியமான தட்டுக்கள் நமக்கு தேவைப்படுகிறது.
அதனால், வைட்டமின் K அடங்கிய உணவுகளான கல்லீரல், காலே, முட்டை ஆகியவை நமக்கு இந்த முறையை மேம்படுத்த பெரிதும் துணையாக நிற்கிறது.

தூக்கமே வரமாட்டேங்குதா? இந்த 6 யோகாசனம் செஞ்சு பாருங்க!

உங்கள் உடல் சோர்வுற்று தலை தலையணையில் சாயும் அந்த இரவுப் பொழுதில் கூட உங்கள் மூளை மட்டும் சிந்தித்தால் எப்படி இருக்கும்?
 
வளர்ந்து வரும் உலகில் சில சத்தங்கள் மற்றும் இடையூறுகள் கூட அவர்களது தூக்கத்தை பரிக்கின்றன (சத்தம், வெளிச்சம், டெக்னாலஜி:செல் போன், லேப்டாப்). எனவே தங்கள் தூக்கத்திற்காக அவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.Yoga For Insomniacs - How To Get A Restful Sleep From Yoga
ஆனால் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை எடுப்பதை நிறுத்தி விட்டாலும் இன்ஸோமினியா திரும்ப வரும் அபாயமும் இருக்கிறது. ஏனெனில் இந்த மாத்திரைகள் மேலோட்டமாக பிரச்சினையை சரி பண்ணுமே தவிர அதன் அடி வேரை பிடுங்க முடிவதில்லை.
இப்படி தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. இது உங்களது உடல் வெப்பநிலை மற்றும் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. உங்கள் இதயத் துடிப்பும் அதிகமாகும் .
சரி இதற்கு என்ன தான் செய்வது :
நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். இங்கே சில யோகா பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். இந்த யோகா பயிற்சிகள் வாழ்க்கை ஒரு கலை என்னும் நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் மஞ்சுநாத் புஜாரி அவர்கள் கூறியதிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.1. சந்திர பத்னா பிராணயாமம் :

1. சந்திர பத்னா பிராணயாமம் :

நமது இடது மூக்குத்துவாரம் தான் நமது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. எனவே தான் இதை சந்திரன் போல் அடையாளம் கொள்கின்றனர். இது மிகவும் எளிய அற்புதமான பயிற்சி ஆகும். உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
செய்முறை :
சுவாசிக்காசனா (மங்களகரமான நிலை) அல்லது பத்மாசனம்(தாமரை நிலை) போன்ற நிலையில் முதலில் உட்கார வேண்டும்.
ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரலை உள்ளங்கையை நோக்கி மடக்கி கொள்ள வேண்டும். வலது பெருவிரலை கொண்டு வலது மூக்குத்துவாரத்தை மூடிக் கொள்ள வேண்டும்.
மெதுவாக ஆழமாக காற்றை இடது மூக்குத்துவாரம் வழியாக உங்கள் நுரையீரல் முழுவதும் நிரம்பும் வரை இழுத்துக் கொள்ள வேண்டும்.
சில நொடிகள் உங்களால் இயன்ற அளவு மூச்சை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மெதுவாக வலது மூக்குத்துவாரம் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். (கண்டிப்பாக மூச்சை வெளியிடுதல் நேரம் உள் இழுக்கும் நேரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.)
10 தடவை இதை திரும்பவும் செய்யவும்.2.விபரீத கரணி(கால்களை சுவரின் மீது வைக்கும் நிலை)

2.விபரீத கரணி(கால்களை சுவரின் மீது வைக்கும் நிலை)

இந்த வகை ஆசனம் மன அமைதி, இதயத் துடிப்பு சீராக்குதல், மூச்சு மற்றும் மூளையின் செயல் அலைகளை சீராக்குதல் போன்ற பயன்களை கொடுக்கிறது.
செய்முறை :
ஒரு கனமான போர்வையை சுருட்டி நமது உடலுக்கு பக்க பலமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை சுவற்றில் இருந்து 6 அடி தள்ளி வைக்க வேண்டும்.
இப்பொழுது வலது பக்கம் சுவருக்கு எதிராக இருக்க வேண்டும். மெதுவாக மூச்சை வலது மூக்குத்துவாரம் வழியாக வெளியே விட வேண்டும்.
தோள்பட்டையை தரையின் மீது வைத்து சுவரின் மீது காலை தூக்கி வைக்க வேண்டும். உட்கார உதவும் இடுப்பெலும்புகள் நீங்கள் கால்களை சுவரின் மீது வைப்பதற்கு உதவும். இப்பொழுது இடுப்பை உயர்த்தி கைகளால் பிடிக்க வேண்டும். இது மார்புப் பகுதிக்கு பக்க பலமாக அமையும்.
தோள்பட்டை தரையின் மீது இருக்க வேண்டும்.
கால்கள், முகம், தாடை எல்லாம் 5-15 நிமிடங்கள் ரிலாக்ஸாக அப்படியே இருக்க வேண்டும்.
பிறகு உங்கள் பக்க பலமாக உள்ள போர்வையை எடுத்து விட்டு மூச்சை இழுத்து விட்டு அப்படியே மெதுவாக திரும்பி பழைய நிலைக்கு வரவும்.
இந்த ஆசனம் தூங்க போகும் முன் அல்லது மாலை நேரத்தில் செய்யலாம்.3.சேது பந்தாஸனம் (பாலம் போன்ற நிலை) :

3.சேது பந்தாஸனம் (பாலம் போன்ற நிலை) :

இந்த ஆசனம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி, ஆற்றல் போன்றவற்றை தருகிறது. மேலும் உடல் சீரமைப்பு பணிகளையும் செய்கிறது.
செய்முறை
முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். நல்ல கனமான போர்வையை உங்கள் தோள்பட்டைக்கு பக்க பலமாக வைத்துக் கொண்டால் அது உங்கள் கழுத்தை பாதுகாக்கும்.
இப்பொழுது முழங்காலை மடக்கி பாதம் தரையின் மீது பட வேண்டும். முடிந்த வரை கணுக்காலும் இடுப்பு எலும்பு பகுதியும் பக்கத்தில் இருக்க வேண்டும்.
மூச்சை வெளியே விட வேண்டும். உங்கள் பாதத்தின் உள்பகுதி மற்றும் கைகள் தரையின் மீதான இருக்க வேண்டும். பிறகு கைகளால் கணுக்காலை பிடித்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இடுப்பு மற்றும் முதுகுப்பகுதியை தரையில் இருந்து தூக்க வேண்டும். உங்கள் தொடைகள் மற்றும் பாதத்தின் உள்பகுதி இரண்டும் இணையாக இருக்க வேண்டும்.
புட்டத்தை தரைக்கு இணையாக இருக்கும் வரை உயர்த்த வேண்டும்.
இந்நிலையில் 30 நொடிகளில் இருந்து 1 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.
மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வந்து தண்டுவடத்தை மெதுவாக தரையின் மீது வைத்து மெதுவாக எழுந்திருக்கவும். 4.சலபாசனம்(வெட்டுக் கிளி போன்ற நிலை)

4.சலபாசனம்(வெட்டுக் கிளி போன்ற நிலை)

இந்த ஆசனம் உங்கள் தண்டுவடத்தை ரிலாக்ஸ் செய்கிறது. மேலும் ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகிறது.
செய்முறை :
தரையில் குப்புற படுத்துக் கொண்டு கனமான போர்வையை சுருட்டி இடுப்பு மற்றும் விலா எலும்புகளுக்கு பக்க பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தொப்புள் பகுதி தரையை தொட வேண்டும். கைகளை பக்கவாட்டில் வைத்து நெற்றி தரையின் மீது தொட வேண்டும்.
உங்களது கை விரல்கள் புட்டத்தை தொட வேண்டும். மூச்சை வெளியே விட்டு தலை, மார்பு மற்றும் இடுப்புக்கு இடைப்பட்ட பகுதி, கைகள், கால்கள் போன்றவற்றை அப்படியே தூக்க வேண்டும்.
அடி விலா எலும்புகள், தொப்புள் பகுதி மற்றும் இடுப்பின் முன் பகுதி போன்றவை தரையில் இருக்க வேண்டும்.
கைகளை தரைக்கு இணையாக வைக்க வேண்டும். கன்னம் நேராக, தலையை தூக்கி கழுத்தை முன்னே நீட்டி இருக்க வேண்டும்.
இதே நிலையில் 30-1நிமிடங்கள் மூச்சை வெளியே விட்டு பிறகு பழைய நிலைக்கு வரவும் 5.உஜ்ஜயி பிராணயாமம் (வெற்றி மூச்சுப்பயிற்சி)

5.உஜ்ஜயி பிராணயாமம் (வெற்றி மூச்சுப்பயிற்சி)

உஜ்ஜயி என்பதன் பொருள் வெற்றி. இந்த ஆசனம் உடலுக்கு தேவையான அமைதியையும் ஆற்றலையும் தருகிறது.
யோகா சூத்திரத்தில் ரிஷி பதஞ்சலி என்ன சொல்லுகிறார் என்றால் மூச்சுப்பயிற்சி என்பது தீர்க (நீண்ட)மற்றும் சுஹஸ்மா (மெதுவாக) இருக்க வேண்டும்.
இந்த கருத்துக்கள் வாழ்க்கை ஒரு கலை நிகழ்ச்சியில் சொல்லப்பட்டவை ஆகும்.
இரண்டு மூக்குத்துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை முடிந்த வரை உள்ளே இழுத்து (4நொடிகள் ) பின் அப்படியே மூச்சை உள் நிறுத்தி (10நொடிகள்) பின் நிதானமாக மெதுவாக வெளி விடுதல் வேண்டும். (8நொடிகள்) .இதுவே உஜ்ஜயி பிராணயாமம் ஆகும்.
இது பெரிய அலை பிராணயாமம் என்றும் அழைக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் சுளுக்கை போக்கும் ஒரு அருமையான நாட்டு வைத்தியம் !!

விபத்து ஏற்படும் நேரங்களில் அனைவருக்கும் முதலில் செய்யப்படுவது முதலுதவி. இந்த முதலுதவி பலரது உயிர்களை காப்பாற்றி உள்ளது. விபத்து ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் முதலுதவு செய்வதால் சிறிது நேரத்திற்கு பிரச்சனை தீவிரமடைவதை தடுக்க முடியும்.
இதற்காவே அனைத்து பொது இடங்களிலும் முதலுதவிக்கென்று பெட்டிகள் இருந்தாலும் நமது வீட்டில் உள்ள சமையல் அறைகளில் உள்ள பொருட்களை வைத்து முதலுதவி செய்ய முடியும்.Kitchen Ingredients Which Help In First Aid
முதலுதவி பெட்டிகளில் உள்ள பேன்டேஜ் மற்றும் இதர பொருட்கள் இருக்கும் ஆனால் அவை அனைத்து வகைகளிலும் உதவினாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகித்தால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. மிகவும் எளியது மற்றும் பாதுகாப்பானதும் கூட. வாருங்கள் இப்போது நாம் வீட்டில் உள்ள சில சமையல் அறைப் பொருட்கள் எப்படியெல்லாம் முதலுதவி செய்வதற்கு உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்...பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக். இதனை பூச்சிக் கடி போன்ற பிரச்சனைகளுக்கான முதலுதலிக்கு உபயோகிக்கலாம்.
சில கிராமப்புற பகுதிகளில், பூண்டு சாறு மற்றும் உப்பு கலவையை சுளுக்குகள், சிறு காயங்கள் மற்றும் மணிக்கட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், நீங்கள் காது தொற்றுநோயை அகற்ற காதுகளில் ஒரு சிறிய துண்டு பூண்டு வைக்கலாம். நிச்சயமாக இது பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது, ஏனெனில் பூண்டு துண்டு காதுகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

தேனீக்கள் கொட்டினால் அதற்கு கண்டிப்பாக உதவக்கூடிய வைத்தியம் என்றால் அது பேக்கிங் சோடா. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து, தேனீக்கள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும்.
இது வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். ஆனால், இது நிரந்தர முடிவல்ல தற்காலிக மருத்துவம் தான். நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். கற்றாழை

கற்றாழை

வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு கற்றாழை ஜெல் சிறந்த முதலுதவியாக உதவக்கூடியது. இதனை அடிப்பட்ட இடங்களில் தேய்க்கும் போது எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியைத் தரக்கூடியது.தேன்

தேன்

தேனில் அற்புத குணங்கள் கீழே விழுந்து ஏற்பட்ட காயங்களுக்கும், வெட்டு காயங்களுக்கும் சிறந்து உதவக்கூடியது. தேனில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி- பாக்டீரியல் குணங்களும் சிறந்த முதலுதவி பொருளாக செயல்படுகிறது.மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

முதலுதவி என்றாலே முதலில் அனைவரின் நினைவிற்கும் வருவது மஞ்சள் தூள். ஒரு சிறந்த கிருமி நானிசியாக இது செய்லபடக்கூடியது. அடிபட்ட இடங்களில், வெட்டுகாயங்களில் மஞ்சள் தூளை தேய்ப்பது சிறந்த முதலுதவி. நோய் தொற்றுக்களை போக்குவதற்கு மஞ்சள் தூளில் உள்ள அழற்ஜி நீக்கும தன்மை உதவுகிறது.ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

முதலுதவி பொருட்களில் ஆப்பிள் விடர் வினிகரும் அடம் பிடித்தள்ளது. தேனீ கொட்டுயது அல்லது சில வகை அரிப்பு பிரச்சனைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. துளசி

துளசி

துளசி கோயில்களில் சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கும் மட்டும் பயன்படுவதல்ல. கொசுக்கடி மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு முதலுதவி செய்வதிலும் துளசி மிகவும் உதவக்கூடியது.

டயட் இருக்கிறீங்களா? அதுக்கு முன்னாடி இருபாலரும் தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?

ஆண் பெண் இருபாலர்களுக்கும் உடல் அமைப்பில் மாற்றம், மரபணு வேறுபாடுகள், இனப்பெருக்க செயல்பாடுகள் போன்றவற்றால் ஊட்டச்சத்துக்கள்களின் தேவை இருவருக்கும் மாறுபடுகின்றன. இதன் காரணமாக ஒரு ஆணுக்கு சராசரியாக தினமும் 2500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் தேவைப்படுவதாக தெரிய வருகிறது.
பொதுவாக ஆண் பெண் இருபாலரின் உடல் மற்றும் தசைகளின் அடர்த்தியை கொண்டே கலோரிகள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களின் தசை 30 - 40 % அதிகமாகும். அதன் அடிப்படையில் தான் ஆண் பெண் இருவருக்கும் தேவையான கலோரிகள் தீர்மானிக்கப்படுகின்றன.Men and Women should follow different diet rules- Experts says.சரி இந்த ஊட்ட சத்துகள் எவ்வாறு பெறப்படுகின்றன? பொதுவாகவே கார்போ ஹைட்ரேட் மூலமாகவே அதிக கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன. அது நமது உணவில் 45% - 65% இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கார்போ ஹைட்ரேட்கள் அரிசி சம்மந்தப்பட்ட உணவுகளில் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதைத் தவிர பாஸ்தா மற்றும் தானியங்களிலும் கலோரிகள் நிறைந்திருக்கின்றன.Men and Women should follow different diet rules- Experts says.இருந்தாலும் இவைகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வதால் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு மன சோர்வு வருவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாஸ்டா மற்றும் தானியங்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலேயே இது போன்ற மன சோர்வு வருவதாக ஒரு டாக்டர் குறிப்பிட்டார்.
மேலும் ஆண் பெண் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்களுக்கு ஏற்படும் மாததவிடாய், பிள்ளைப்பேறு ஆகியவற்றால் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் எலும்பு தன்மை முதலியவற்றால் கால்சியம் அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆண்களுக்கு தினமும் 700 மிகி கால்சியம் போதுமானது. ஆனால் அதுவே பெண்களுக்கு 1200 மிகி தேவைப்படுகிறது.
இந்த கால்சியம் சத்தானது பால் பொருட்களில், குறிப்பாக பாலடை கட்டியில் அதிகம் நிறைந்திருக்கிறது. அதை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆண் பெண் இருவரும் தினமும் கோகோ நிறைந்த சாக்லேட் எடுத்துக்கொள்வது மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதால் எதிர் காலத்தில் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்படுகின்றன.Men and Women should follow different diet rules- Experts says.மேலும் ஜிங்க் ஆண்களுக்கு தினமும் 9.5 மில்லி கிராமும் பெண்களுக்கு 7 தில்லி கிராமும் தேவைப்படுகிறது. மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் ஜிங்க் அதிகம் உள்ளது. பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளிலும் ஜிங்க் நிறைந்துள்ளது.
மதுவைப் பொறுத்தவரை பொதுவாக இருபாலருமே குறைவாக எடுத்துக்கொள்வது இதயத்திற்கு நல்லது. அதே சமயம் மது பழக்கத்தால் பெண்களுக்கு மார்பு புற்று வரும் வாய்ப்பு இருப்பதால் அதை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அதைவிட மிக நல்லது. இறுதியாக முக்கியமான தாதுக்கள் வைட்டமின்கள் நிறைந்ததொரு சமநிலை உணவு இருபாலருக்குமே தேவை; அதைவிட முக்கியமானது நல்லதொரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை. எனவே, அதை நாம் தவறாமல் கடைப்பிடிப்போம்.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...