இன்றைக்கு உலகையே அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருப்பது சர்க்கரை நோய். ஆரோக்கியமான டயட்டில் சர்க்கரைக்கும் ஓர் பங்குண்டு. ஆனால் உடலுக்கு தேவையான சர்க்கரையை விட அதிகளவு எடுத்துக் கொண்டால் அது தலை முதல் கால் வரை ஏராளமான பிரச்சனையை உண்டாக்கும்.
பலருக்கும் இனிப்பு சுவைக்கு அடிமையாகிவிட்டதாக உணர முடிகிறது. ஒருநாளில் பெண்கள் ஆறு டீஸ்பூன் அளவு சர்க்கரையும் ஆண்கள் ஒன்பது டீஸ்ப்பூன் அளவு சர்க்கரையையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாருமே இந்த அளவைத் தாண்டி தான் சர்க்கரையை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை தவிர்க்க இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நம் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதுமானது.

செயற்கை சுவையூட்டிகள் :
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். குறிப்பாக செயற்கையாக நிறம் மற்றும் சுவையூட்டிகள் இருந்தால் அவற்றை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.
அமெரிக்காவில் எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் படி செயற்கை சுவையூட்டிகள் தொடர்ந்து சாப்பிட்டு எலிகளுக்கு எடை அதிகரித்ததுடன் தொடர்ந்து இனிப்பு சுவை உட்கொள்வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம்.

சத்தான ஸ்நாக்ஸ் :
காய்கறி பழங்கள் போன்ற சத்தானவற்றை ஸ்நாக்ஸாக உட்கொள்ளுங்கள். நட்ஸ்,பாப்கார்ன் போன்றவை சாப்பிடலாம். நொருக்குத் தீனிகளை முடிந்தளவு குறைந்திடுங்கள்.

ப்ரோட்டீன் :
அதிக சர்க்கரைதேவைப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் ப்ரோட்டீன் குறைவாக இருப்பது தான். ப்ரோட்டின் அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்து வர உடலில் சர்க்கரைக்கான தேவை குறைந்து விடும்.
அதோடு ப்ரோட்டீன் உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதாகும் என்பதால் அடிக்கடி பசி ஏற்ப்பட்டு கண்ட உணவுகளையும் சாப்பிடுவது தவிர்க்கப்படும்.

தண்ணீர் :
அதிக தாகமே பசியாக மாறிட வாய்ப்புண்டு. பசியுணர்வு வந்தாலோ அல்லது திடீரென குறிப்பிட்ட சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலோ உடனடியாக தண்ணீரை குடித்திடுங்கள். இம்முறை நினைத்த சுவையை மறக்கச் செய்யும்.
அதோடில்லாமல் சர்க்கரை தேவைப்படுகிறது என்றால் உடலில் தண்ணீர் போதுமான அளவு இல்லை என்பது ஓர் காரணமாக இருக்கும்.

பட்டை :
உடலில் உள்ள ரத்த சர்க்கரையளவை சரியான அளவில் பராமரிப்பதில் பட்டைக்கு முக்கிய பங்குண்டு. பட்டையில் டீ தயாரித்து குடிக்கலாம்.
மூன்று இன்ச் அளவுள்ள பட்டையை சின்ன சின்ன பீஸ்களாக உடைத்துக்கொள்ளுங்கள். அதனை ஒன்றைகப் தண்ணீரில் போட்டு குறைந்த அளவிலான தீயில் சூடுபடுத்துங்கள். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்கட்டும். சூடு குறைந்ததும் பருகலாம். இதனை தினமும் கூட குடிக்கலாம்.

தூக்கம் :
போதியளவு தூக்கமின்மையால் பகலில் தூக்கம் வரும் அதனை தவிர்க்க ஏதேனும் உணவு சாப்பிட வேண்டும் என்று கண்ட உணவுகளையும் சாப்பிட்டு விடுவீர்கள். அதோடு மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்காது சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றிக் கொண்டேயிருக்கும்.

சுகர் ஃப்ரீ :
சுகர் ஃப்ரீ ஜெம் வாங்கி மென்று சுவைக்கலாம். மதிய உணவுக்குப் பிறகு இதனை எடுத்துக் கொள்வதால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தவிர்க்கப்படும். அதோடு பசியுணர்வும் மட்டுப்படுத்தப்படும்.

நேரத்தில் உணவு :
பசி மற்றும் போதுமான சத்துக்கள் இல்லாதது தான் சர்க்கரையை சாப்பிடத் தூண்டும் . இதனை தவிர்க்க முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்று முதல் ஐந்து மணிநேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இந்நேரங்களில் ஜங்க் ஃபுட், மற்றும் ஹெவி மீல்ஸ் போன்றவை சாப்பிடாமல் லைட்டாக சாப்பிடுங்கள்.

நடை பயிற்சி :
உடலுக்கு குறைந்தளவிலான அசைவுகளையாவது கொடுத்திட வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மூளையில் எண்டோர்பின்ஸ் என்ற கெமிக்கல் சுரக்கும் இந்த கெமிக்கல் குறிப்பிட்ட சுவையில் உணவுகள் வேண்டும் என்று கேட்பதை தவிர்க்கச் செய்யும்.
தினமும் ஓரு அரை மணி நேரமாவது வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment