Thursday, 31 August 2017

ரத்த சோகையை முழுமையாக குணப்படுத்தும் ஒரு அற்புத வைத்திய சிகிச்சை!!

ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று டான்ஸ் ஆடுகிறீர்கள். தீடீரென்று பயங்கரமான சோர்வால் வெளியேறுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. உங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் கனவாக போய்விடும் அல்லவா.
நீங்கள் உங்கள் உடற்சார்ந்த செயலில் ஈடுபடும் போது அதாவது டான்ஸிங், ஓட்டம், வீட்டு வேலைகள் போன்றவை செய்யும் போது சோர்வடைவது இயல்பு. ஆனால் சின்ன சின்ன செயல்களுக்கு கூட சோர்வடைவது என்பது உங்களுக்கு உடல் நல பிரச்சினையை காட்டுகிறது.


is-there-a-home-remedy-for-anaemiaநமது உடலானது வெவ்வேறு உறுப்புகள், திசுக்கள், இரத்தம் மற்றும் இரத்த செல்களால் ஆனது. இரத்தம் என்பது சிவப்பு நிற நீர்ம நிலையில் உள்ள பொருள் இது நமது உடலில் உள்ள இரத்த குழாய்களான தமனிகள் மற்றும் சிரைகளின் வழியாக நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்பட தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது.
மேலும் இது நமது உடலிருந்து நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. எனவே இரத்தம் என்பது அனைத்து உயிர்களுக்கும் மிகவும் முக்கியமானது.
இரத்தம் இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் போன்ற பொருட்களை கொண்டுள்ளன.
இதில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் புரோட்டீன் என்ற ஹீமோகுளோபினால் ஆனது. இது உடலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை எடுத்துச் சென்று ஆக்ஸிஜனாக மாற்றம் செய்யப்பட்டு சுத்தமான இரத்தமாக மாற்றுகிறது.
இரத்த வெள்ளை அணுக்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதற்கு பயன்படுகிறது. அதிகமான இரத்த போக்கு இருந்தால் இரத்தத்தை உறையச் செய்து அதை தடுக்கிறது.
இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனால் அனிமியா அல்லது இரத்த சோகை ஏற்படுகிறது. இந்த அனிமியாவின் அறிகுறிகளாவன :சோர்வு, தூக்கம், மூச்சு விடுவது குறைதல், வெளிரிய சருமம், பலவீனமடைதல், தலைவலி, அதிகமான மாதவிடாய் இரத்த போக்கு போன்றவை ஏற்படும்.
இந்த பிரச்சினையை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் தீவிர உடல் நல பிரச்சினையை ஏற்படுத்தி விடும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இங்கே ஒரு அற்புதமான இயற்கை வீட்டு வைத்திய முறை கொடுக்கப்பட்டுள்ளது.தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

மாதுளை பழம் ஜூஸ் - 1 டம்ளர்
எள்ளுப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்செய்முறை :

செய்முறை :

தேவையான அளவு எள்ளுப் பொடியை மாதுளை ஜூஸில் கலந்து கொள்ளவும். நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு பின் 2 மாதத்திற்கு குடித்து வந்தால் அனிமியாவிலிருந்து விடுபடலாம்.நன்மைகள் :

நன்மைகள் :

இதை சரியான அளவில் தினமும் பயன்படுத்தி வந்தால் வீட்டிலேயே உங்கள் அனிமியா (இரத்த சோகை) நோயை குணப்படுத்தி விடலாம் . இந்த மாதுளை மற்றும் எள் பொருட்கள் அதிகளவு இரும்புச் சத்து மற்றும் புரோட்டீன்கள் கொண்டு இருப்பதால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. உணவு முறை :

உணவு முறை :

இதனுடன் இரும்புச் சத்து அதிகமான உணவுகளான கீரைகள், பீட்ரூட், மாமிசம் போன்றவற்றையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.பாத்திரம் :

பாத்திரம் :

உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமையுங்கள். இதனால் உணவிற்கு தேவையான இரும்புச் சத்து சேரும். இந்த முறையுடன் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அடிக்கடி பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளவும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...