Thursday, 31 August 2017

அதிகமான சூரிய ஒளியால் உங்கள் கண்களில் ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா

அதிகமான சூரிய ஒளியால் உங்கள் கண்களில் உள்ள கருவிழிப்படலத்தில் கருப்பு புள்ளிகள் வரும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த கருவிழி படல புள்ளிகள் கண்புரை அல்லது மேக்குலார் டிஜெனரேஷன் பாதிப்புகள் வர வழி வகை செய்கின்றன.
இந்த கருவிழி படல புள்ளிகள் பற்றிய ஆராய்ச்சியானது மேலும் நீண்டு இவை வயதாகுதல், வாழும் காலத்தில் ஏற்பட்ட சூரிய ஒளி பாதிப்பு, தீவிர சூரிய ஒளி பாதிப்புகள் போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Higher Sun Exposure May Up Risk Of Eye Freckles
சூரிய ஒளியால் எந்த அளவுக்கு கண் பாதிப்படைகிறது என்பதை சரியாக கணிக்க முடிவதில்லை. ஆனால் கரு விழி படல புள்ளிகள் நமக்கு அதன் தீவிரத்தை காட்டுகிறது என்று கிருஸ்டோப் ஸ்வாப் ஆப்தாலிஸ்ட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ஆஃப் க்ராஷ் இன் ஆஸ்திரேலியாவிலிருந்து கூறுகிறார்.
அதே நேரத்தில் கருப்பு வண்ணம் கருவிழி படலம் கொண்ட மக்கள் இயற்கையாகவே சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கத்தை தடுக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதால் அவர்கள் இதனால் பாதிப்படைவதில்லை. இதே நேரத்தில் நீலம், பிரவுன், க்ரீன் கருவிழிகள் எளிதாக பாதிப்புக்குள்ளாகின்றன.Higher Sun Exposure May Up Risk Of Eye Freckles
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்வஸ்டிகேட்டிவ் ஆப்தாலமாலாஜி & விஷூவல் சைன்ஸ் என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ட்ரியா பகுதியில் இருக்கும் 600 நீச்சல் வீரர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவர்களது வாழ்நாள் சூரிய ஒளி பாதிப்பு மற்றும் சூரிய ஒளி பாதுகாப்பு பழக்க வழக்கங்கள், கருவிழிப்படல ஆராய்ச்சிகள் போன்றவற்றை அவர்களிடம் மேற்கொண்டனர்.
மேலும் இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் கண்களில் நான்காவது பாகத்தின் வெளிப்புறத்தில் நிறைய கரும் புள்ளிகள் கருவிழி படலத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் பாதிப்பால் ஏற்படுகின்றன. இந்த பகுதி மூக்கிலிருந்து தள்ளி அமைந்துள்ள பகுதியாகும்.Higher Sun Exposure May Up Risk Of Eye Frecklesஏனெனில் மேல் மற்றும் உட்பகுதி கண் பாகத்தை கண் இமைகளும் மூக்கும் சூரிய ஒளி கதிர்களிலிருந்து காத்துக் கொள்கின்றன. ஆனால் கீழ் பாகம் அதாவது நான்காவது பாக பகுதி தான் சூரிய ஒளிக்கதிர்களால் அதிகமாக தாக்கப்பட்டு கருவிழி புள்ளிகளுக்கு ஆளாகின்றன என்று ஸ்வாப் கூறுகிறார்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...