ஃபிட்னஸ் என்று வந்துவிட்டாலே பலருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, ஜிம் செல்வதற்கு முன்னால் சாப்பிட வேண்டுமா? என்பது தான். ஏற்கனவே உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவே ஜிம் செல்கிறோம்.
இந்த நேரத்தில் மீண்டும் கலோரிகளை அதிகப்படுத்தலாம் என்று நினைத்து பலரும் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது.

இந்த நேரத்தில் மீண்டும் கலோரிகளை அதிகப்படுத்தலாம் என்று நினைத்து பலரும் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
ஏன் சாப்பிட வேண்டும் ? :
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அதிகப்படியான வியர்வை வரும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்திடும் இதனை ஈடுக்கட்ட ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உறிஞ்சிக் கொள்ளும்.
காலை உணவு சாப்பிடாமல் செல்லும் போது ஏற்கனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். அதோடு எனர்ஜிக்காக தசைகளின் திசுக்களை உறிய ஆரம்பித்துவிடும். இதனால் போதுமான எனர்ஜி கிடைக்காமல் மயக்கம் ஏற்படும்.
எவ்வளவு சாப்பிட வேண்டும் ? :
ஜிம் போவதற்கு முன்னால் சாப்பிடுபவர்கள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது உண்ணும் உணவின் அளவைத் தான். அதிகமாக சாப்பிட்டாலும் மிகக்குறைவாக சாப்பிட்டாலும் பிரச்சனையே.
No comments:
Post a Comment