Thursday, 31 August 2017

மலேரியா வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டிய முன்னெச்செரிக்கை வழிகள்!!

மழைக்காலம் வந்தாலே நீர்தேக்கத்தாலும் நீரில் பரவும் நோய்த்தொற்றுக்களாலும் நுண்ணுயிரிகளாலும் பலவகை வியாதிகள் வரும். அதில் மலேரியா, டைபோய்டு, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் ஜலதோஷங்கள் பெரும்பாலும் வருபவை.
மருத்துவமனைகளிலும் சிறிய கிளினிக்குகளிலும் இந்த நோய்த்தொற்று பிரச்சினைகளால் மக்கள் கூட்டம் நிரம்பியிருப்பதை பார்க்க முடியும்.Over 1,000 People Tested Positive For Malaria In Mewat; 5 Basic Tips To Prevent Malariaஇந்த நோய்களை நோய்த்தொற்றுகளை தடுக்க பல வழிமுறைகளை பின்பற்றிய போதிலும், ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவார் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி 2017 முதல் 31 ஜூலை 2017 வரை 1,138 பேர் இந்த நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
மலேரியா காய்ச்சல், அனபலிஸ் என்ற கொசுக்கடியால் பரவும் நோய்க்கிருமிகளால் ஏற்படுகிறது. இந்த கொசுக்கடி மூலம் நோய்த்தொற்று ஒட்டுண்ணி இரத்தஓட்டத்தில் கலந்து, இரத்த அணுக்களை பாதிக்கிறது.இந்த நோய்க்கான அறிகுறிகள் பத்துநாட்கள் கடந்தே தெரியும். அதிக காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், அதிக வியர்வை, உடற்தசைகளில் வலி, வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவை மலரியாவிற்கு முக்கிய அறிகுறிகள்.
வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்றுக்கேற்ப மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க சில தடுப்பு முறைகளை நாம் கையாள்வதால் மலேரியா போன்ற கொடிய நோய்த்தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.கீழ்கண்ட சில தடுப்புமுறைகளை பின்பற்றி மலேரியா வராமல் காத்துக்கொள்ளுங்கள் .
1. மிதமான வண்ணமுடைய ஆடைகளை உடுத்துதல்
அடர்ந்த நிறமுள்ள உடைகள் கொசுக்களை ஈர்க்கும். எனவே மிதமான வண்ணமுடைய உடைகளை உடுத்துவது சிறந்தது மற்றும் இது கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் காக்கும். மேலும் நீங்கள் கைகளை முழுமையாக மறைக்கும் வகையிலான உடைகளை அணிவது இன்னும் உகந்தது இதனால் முற்றிலும் கொசுக்கடியை தவிர்க்கலாம்.Over 1,000 People Tested Positive For Malaria In Mewat; 5 Basic Tips To Prevent Malaria2. கொசுவலை பயன்படுத்துதல்
கொசுக்கள் மட்டுமே மலேரியா தொற்றுக்களை பரப்பும் முக்கிய காரணியாதலால், கொசுக்கடியை தவிர்ப்பது மிக அவசியமாகும். நீங்கள் உறங்கும்போது கொசுவலையை பயன்படுத்துவதால் கொசுக்கடி தவிர்க்கப்பட்டு நோயின்றி நீங்கள் வாழமுடியும்.
3. வெளிவேலைகளை குறைத்தல்
கொசுக்கள் பெரும்பாலும் விடியற்காலை மற்றும் அந்தி சாயுங்கால நேரங்களில் தான் அதிகமாக கடிக்கும். அதனால் விடியற்காலை மற்றும் அந்தி சாயும் நேரங்களில் வெளி வேலைகளை குறைத்து கொசுக்கடி யில் இருந்து தப்பலாம்.Over 1,000 People Tested Positive For Malaria In Mewat; 5 Basic Tips To Prevent Malaria4. இலவங்கப்பட்டை
மேலும் நீங்கள் ஏற்கனவே மலேரியா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின், இலவங்கப்பட்டை போடி காய்ச்சலை குறைக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. நீங்கள் ஒரு டீஸ்பூன் இலவங்கபட்டைப்பொடி, சிறிதளவு மிளகுத்தூள் சிறிது தேன் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
5. துளசி
துளசி மலேரியா காய்ச்சல் அறிகுறிகளை குறைக்கும் மற்றொரு சிறந்த மூலிகை. துளசி இலைச்சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் கருமிளகுத்தூள் கலந்து குடிக்கவும். இது மலேரியாவை எளிதில் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...