பாப்கார்ன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களில் ஒன்று. தியேட்டர்களுக்கு செல்லும் போது இன்டர்வெல் ஸ்நாக்ஸாக சாப்பிட்ட பாப்கார்ன் பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது.
6000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கார்னில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாப்கார்ன் இன்று பல சுவைகளில் கிடைக்கிறது. உலகம் முழுவதும் கிடைக்ககூடிய ஓர் உணவுப் பொருள் என்றால் நிச்சயமாக பாப்கார்னை சொல்லலாம்.

6000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கார்னில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாப்கார்ன் இன்று பல சுவைகளில் கிடைக்கிறது. உலகம் முழுவதும் கிடைக்ககூடிய ஓர் உணவுப் பொருள் என்றால் நிச்சயமாக பாப்கார்னை சொல்லலாம்.
பாப்கார்னுடன் சுவையூட்டிகள் இல்லாமல், ஆயில் சேர்க்காமல் வெறும் சூடுபடுத்தி சாப்பிடும் பாப்கார்ன் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.

என்னென்ன இருக்கிறது ? :
பாப்கார்னில் ஃபைபர்,பாலிஃபினாலிக் காம்பவுண்ட்ஸ்,ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்,விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மக்னீசியம், இருக்கிறது. ஸ்நாக்ஸாக சாப்பிடக்கூடிய பாப்கார்னில் இத்தனை சத்துக்கள் கிடைக்கிறது என்று ஆச்சரியப்படும் அதே நேரத்தில் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

செரிமானம் :
பாப்கார்ன் ஓர் வகையான தானியம். அரிசி,பருப்பைப் போன்றே இதற்கும் சில குணாதிசியங்கள் உண்டு. இதிலிருக்கும் ஃபைபர் செரிமானத்தை துரிதப்படுத்தும். செரிமானத்திற்கு தேவையான திரவத்தை அதிகப்படுத்துவதால் செரிமானமும் துரிதமாக நடக்கிறது.

கொலஸ்ட்ரால் :
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்திடும். பாப்கார்ன் ரத்தத்தின் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுவது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்திடும் என்பதால் அதனை தவிர்க்க பாப்கார்ன் தாரளமாக சாப்பிடலாம். மாரடைப்பு, ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்திடும்.

புற்றுநோய் :
இதிலிருக்கும் பாலிஃபினாலிக் பொருட்கள் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டை அதிகப்படுத்தும். அதோடு செல்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும். இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படும். குறிப்பாக, புற்றுநோய். ஆரோக்கியமான டிஎன்ஏ வை உருவாக்குவதில் பாப்கார்ன் முக்கியப் பங்காற்றுகிறது.

வயதான தோற்றம் :
வயதான தோற்றத்தை அளிக்கும் சுருக்கங்கள், தசை வலுவிழத்தல்,கண்பார்வை குறைபாடு,அல்சைமர்,முடி உதிர்தல் போன்றவற்றை இளம்வயதிலேயே அதாவது முதமையின் ஆரம்பத்திலேயே வராமல் தடுத்திட பாப்கார்ன் சாப்பிடலாம்.

எடை குறைப்பு :
ஒரு கப் பாப்கார்னில் 30 கலோரி கிடைக்கும்.உருளைக்கிழங்கு சிப்ஸில் இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகம் இது. இதில் ஃபைபர் கண்டண்ட் அதிகமாக இருப்பதால் சீக்கிரம் பசி உணர்வு ஏற்படாது. இதனால் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கலாம்.

எச்சரிக்கை :
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று சொல்லப்பட்டாலும் அதனை அளவுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு, இதில் சேர்க்கப்படும் உப்பு,பட்டர் உட்பட பல சுவையூட்டிகளால் பாப்கார்னில் இருக்கும் சத்துக்கள் மட்டுப்பட வாய்ப்புண்டு. இதனால் உடல்நலத்திற்கு கேடு உண்டாகும். அதே போல பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாப்கார்ன் வாங்குவதை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment