வாய்ப்புண் பலரை வாட்டி எடுக்கும் ஒரு நோயாகும். வாயில் புண் இருந்தால் நினைத்த உணவை சாப்பிட முடியாது. மிகவும் சிரமமாக இருக்கும். அவ்வளவு ஏன் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் போகும். வாய்ப்புண்ணை விரட்ட என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.


ஏன் உண்டாகிறது?
வாய்ப்புண்(Mouth Ulcer) சரியாக சாப்பிடாததாலும், போதுமான அளவு உணவு எடுத்துக்கொள்ளாததாலும் உண்டாகிறது. இந்த வாய்ப்புண் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மற்றும் சில பழக்கவழக்கங்கள் வாய்ப்புண்ணுக்கு காரணமாகின்றன.

நீண்ட காலமாக இருப்பது!
வாய்ப்புண்ணை நீண்ட காலமாக கண்டு கொள்ளாமல் இருந்தால், இது வேறு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும் வாய்ப்புண் சில சமயம் கேன்சருக்கு கூட வழிவகுக்கலாம். எனவே இதனை முன்னரே கவனிக்க வேண்டியது அவசியம்.

தேன் மற்றும் நெல்லிக்காய்
தேன் மற்றும் நெல்லிக்காய் வாய்ப்புண்ணை போக்க மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. இது தொற்றுகளை தடுக்க உதவுகிறது. இது வாய்ப்புண் பரவுவதையும், புண்ணின் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
துருவிய பெரிய நெல்லிக்காய் - 1 டிஸ்பூன்
தேன் - 1 டிஸ்பூன்

செய்முறை
தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை புண் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த நெல்லிக்காய் மற்றும் தேன் கலவையை தினமும் ஒருமுறை என ஒரு வாரத்திற்கு சாப்பிடவும் செய்யலாம்.

குறிப்பு
இந்த நெல்லிக்காய் மற்றும் தேன் கலவை மட்டுமே அல்சரை குணப்படுத்திவிடாது. சத்தான உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். வாய்ப்புண் தீவிரமானதாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். கூடுதலாக இந்த நெல்லிக்காய் மற்றும் தேனை சாப்பிடுவதும், புண் உள்ள இடத்தில் தடவுவதும் நல்ல பலனை தரும்.
No comments:
Post a Comment